அயோத்தியில் ராம நவமி: ஸ்ரீ ராமரின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய திலகம் – பக்தர்கள் பரவசம்
ராம நவமி திருநாளை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோவில் பகுதியில் இன்று அபூர்வமான ஆன்மிக நிகழ்வு ஒன்று நடைபெற்றது. சூரியனின் ஒளிக்கதிர்கள், ஸ்ரீ ராமரின் நெற்றியில் திலகம் வைத்தது போல் நேரடியாக பட்ட காட்சி பக்தர்களை ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தில் ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தனர்.
இந்நாளில் நடைபெற்ற ஜன்ம ஆரத்தி மற்றும் "சூரிய திலகம்" நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும். சூரியன் நேரடியாக ராம்லல்லாவின் நெற்றியில் ஒளிர்ந்த காட்சி, பக்தர்களுக்கு அரிய ஆன்மிக அனுபவமாக அமைந்தது.
மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், நகரம் முழுவதும் பெரிய திரைகள் மூலம் இந்த நிகழ்வு நேரலை ஒளிபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராம நவமி கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்