உடனடி செய்தி

பெங்களூரு : சசிகலா - விஜயசாந்தி சந்திப்பு

பெங்களூரு : சசிகலா - விஜயசாந்தி சந்திப்பு

பெங்களூரு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான விஜயசாந்தி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துள்ளார்.

அமமுக பொது செயலாளரான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அடிக்கடி சந்தித்து வருகிறார். அத்துடன் தகுடி நீக்கம் செய்யப்பட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களும் சசிகலாவை சந்திக்கின்றனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான விஜயசாந்தி சமீபத்தில் சசிகலாவை சந்தித்துள்ளார். இது குறித்து சிறை வட்டாரங்கள் ”காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான விஜயசாந்தி சிறைத்துறையினரின் அனுமதியுடன் சசிகலாவை தனிமையில் சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் தனிமையில் பேசிக் கொண்டிருந்தன்ர்.” என தெரிவித்துள்ளது.

பெயர் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர், “விஜயசாந்திக்கும் சசிகலாவுக்கும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜெயலலிதா மற்றும் நடராஜன் மறைவின் போது விஜயசாந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். பல நாட்களாக அவர் சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். தற்போதைய சந்திப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவை விஜயசாந்தி கேட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்