பீஹார் 5, ஒடிஷா 2 இடங்கள்: ராஜ்யசபா தேர்தலில் பாஜக முன்னிலை
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக இருந்த 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 26 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
பீஹாரில் ஐந்து, ஒடிஷாவில் நான்கு மற்றும் ஹரியானாவில் இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பீஹாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஒடிஷாவில் நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் மன்மோகன் சமல், சுஜீத் குமார் வெற்றி பெற்றனர். மேலும் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ராய் கடும் போட்டியில் வெற்றி பெற்றார். பிஜு ஜனதா தளத்தின் சில எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தது இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.
ஹரியானாவில் ஓட்டு ரகசியம் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா இடங்களும் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களால் போட்டியின்றி நிரப்பப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்