செயின்ட் லூயிஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தல்
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் சர்வதேச ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரின் ரேபிட் பிரிவில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடைசி மூன்று சுற்றுகளில், ஏழாவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதிய ஆட்டம் 42 நகர்த்தல்களில் டிராவில் முடிந்தது. எட்டாவது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்டை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 68வது நகர்த்தலில் வெற்றி பெற்று முக்கியமான புள்ளிகளை சேர்த்தார்.
ஒன்பதாவது மற்றும் இறுதி சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்டிடம் தோல்வியடைந்தாலும், மொத்தம் 4 வெற்றி, 4 டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரேபிட் பிரிவில் முதலிடத்தை தக்க வைத்தார்.
உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ரேபிட் பிரிவில் முன்னிலை பெற்றுள்ள பிரக்ஞானந்தா, அடுத்ததாக நடைபெறும் பிளிட்ஸ் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்