கேரளாவில் கனமழை தீவிரம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள்
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருச்சூர், இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களில் கனமழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்கு பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 418 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 18,434 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக நிலச்சரிவு அபாயம் அதிகமாக உள்ள வயநாடு மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கோழிக்கோடு–வயநாடு மற்றும் கண்ணூர்–வயநாடு மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்