ஹார்முஸ் ஜலசந்தி திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை 5% சரிவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா–ஈரான் பதற்றம் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகியோர், போர் நிறுத்தம், அணுஆயுத விவகாரம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என்ற தகவல் வெளியானதும், உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் குறைந்து பேரலுக்கு 80 அமெரிக்க டாலருக்கும் கீழ் சரிந்தது.
அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலையும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, பேரலுக்கு 76 டாலர் அளவுக்கு குறைந்தது. இது கடந்த மூன்று வாரங்களில் பதிவான மிகக் குறைந்த விலையாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்