பீஹார் முதல்வராக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்பு – பா.ஜ.க.வின் வரலாற்றுச் சாதனை
பாட்னா: நிதிஷ் குமார் நேற்று பீஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்கிறார்.
இவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவராக பீஹார் முதல்வராக பொறுப்பேற்கும் முதல் தலைவர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுகிறார். நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சாம்ராட் சவுத்ரி சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, நிதிஷ் குமார் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றதையடுத்து, கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
இன்று நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள பதிவில், புதிய அரசுக்கு தனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
சாம்ராட் சவுத்ரி அரசியல் பயணம் பல்வேறு கட்சிகளை கடந்து வந்துள்ளது. முதலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சியில் இருந்த இவர், பின்னர் ஜே.டி.யு.வில் இணைந்து, இறுதியாக 2017ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். 2023ஆம் ஆண்டு பீஹார் மாநில பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்