உடனடி செய்தி

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட கடலூரிலிருந்து இந்து தமிழர் கட்சி சார்பில் பூஜை செய்தபுனித செங்கல் அனுப்பும் விழா

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட கடலூரிலிருந்து  இந்து தமிழர் கட்சி சார்பில்  பூஜை செய்தபுனித  செங்கல் அனுப்பும் விழா

கடலூர் திருப்பாதிரிபுலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ஸ்ரீ ராமர் சிலை அமைத்து கோயில் கட்டும் பணிக்கு இந்து தமிழர் கட்சி தலைமை சார்பில், கடலூரில் இருந்து பூஜை செய்த புனித செங்கல் அனுப்பும் விழா நேற்று நடைபெற்றது.

கடலூர் திருப்பாப்புலியூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில்
அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ஸ்ரீராமபிரான் சிலை அமைத்திட கோயில் கட்டும் பணிக்கு கடலூர் இந்து தமிழர் கட்சியின் சார்பில் 25,000 செங்கற்கள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடலூரில் பூஜை செய்த மூன்று செங்கற்கள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து தமிழர் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் திரு உதயவேல் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு இந்து தமிழர் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கடலூர்
திரு என்.ஆர். பரணிதரன் முன்னிலை வகித்தார்.

உடன் நகர தலைவர் திருமுத்துக்குமார்,

ஆலய பாதுகாப்பு குழு செயலாளர்
திரு தண்டபாணி, விஸ்வகர்ம மகாசபா அவைத்தலைவர்
திரு என்.இ.என் இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!

இராம இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்
86430-81430

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
5 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
5 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
5 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்