உடனடி செய்தி

சாதி: கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு?

சாதி: கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு?

எழுதியவர்: முரளி கே.வி

ஒரே வழியில் வந்த பங்காளிகள் எப்படி வேறு சாதி என்று ஆக முடியும்?

சாதியும் வெள்ளைக்கார ஆட்சியும்

சாதி: நாம் ஒவ்வொருவருக்கும் இரண்டே (2) பெற்றோர்கள் தான். அதைப்போல் நான்கே (4) பாட்டன்-பாட்டிகள். அதைப்போல் எட்டே (8) கொள்ளுப்பாட்டன்-பாட்டிகள். அதாவது ஒவ்வொரு தலைமுறை பின்னேப் போகப்போக இரண்டில் ஆரம்பித்து ஒவ்வொரு தலைமுறைக்கும் இரண்டால் பெருக்கிக்கொண்டே போகவேண்டும். எளிமையான கணக்கு தான். இதை கணிதத்தில் சுருக்கமாக 2^n (அதில் n = எத்தானையாவது தலைமுறைக்கு முன்னால்) என்று எழுதுவார்கள். இப்படியே கணக்கிட்டால் பத்தே தலைமுறைக்கு முன்னால் நமக்கு 1024 மூதாதையர்களும், 20 தலைமுறைக்கு முன்னால் 1,048,576 மூதாதையர்கள் வரும் (பத்து லட்சத்தி நாற்பத்தி எட்டாயிரத்தி ஐநூற்றி எழபத்தியாறு). இது கணித ரீதியான உண்மை. இப்பொழுது இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள்தொகை. அப்பொழுது ஒவ்வொருவருடைய 20 தலைமுறைக்கு முன்னால் இருந்த மூதாதையர்களைக் கூட்டினால் பூலோகத்தில் இதுவரை வாழ்ந்த எல்லா மனித எண்ணிக்கையையும் பல மடங்கு மீறும்! இது எப்படி சாத்தியம்? மக்கள் தொகை பெருகிக்கொண்டே தானே போகும். அக்காலத்தில் சனத்தொகை மிக குறைவாக இருந்ததே! “கணக்கு அப்பொழுது பொய் சொல்கிறதா?” இல்லை. கணக்கின் படி 20 தலைமுறைக்கும் முன்னால் நாம் அனைவரும் பங்காளிகள்! இதற்கு ஆங்கிலத்தில் pedigree collapse என்று பெயர். “அதாவது பிறப்பால் சாதிகள் என்று இருந்திருக்க இயலாத ஒன்று!” இது கணித ரீதியான நிருபணம். “ஒரே வழியில் வந்த பங்காளிகள் எப்படி வேறு சாதியாக முடியும்?” நம் வரலாற்று “நிபுணர்களும்”, ஆங்கிலேய கிறிஸ்தவ அரசும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிடாமல் இன்றும் கையாளும் நம் அரசியல்வாதிகள் தான் பொய் சொல்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு: 1. Chang JT. Recent common ancestors of all present-day individuals. Adv. Appl. Prob. 1999: 31, 1002–1026. 2. Rhode DLT, Olson S, Chang JT. Modelling the recent common ancestry of all living humans. Nature. 2004: 431, 562–566. 3. http://pnas.org/content/113/16/E2215.short இதன் அசல் இங்கு (PGurus.com-ல்) முதலில் பதிவாயிற்று.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்