உடனடி செய்தி

சஞ்சு சாம்சன் சதம் அதிரடி: சென்னை அணி முதல் வெற்றி

சஞ்சு சாம்சன் சதம் அதிரடி: சென்னை அணி முதல் வெற்றி
சென்னை: கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டில்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 'டாஸ்' வென்ற டில்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் காயத்திலிருந்து மீண்ட வீரர்கள் திரும்பிய நிலையில், தோனி மீண்டும் அணியில் இடம்பெறவில்லை. துவக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து சிறந்த ஆரம்பத்தை அளித்தனர். குறிப்பாக சாம்சன் அதிரடி ஆட்டத்தில் 52 பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகாமல் இருந்தார். அவருடன் இணைந்த ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். பின்னர் காயம் காரணமாக 'ரிட்டையர்டு ஹர்ட்' ஆனார். கடைசியில் துபே வேகமான 20 ரன்கள் சேர்த்ததால் சென்னை அணி 20 ஓவரில் 212/2 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. பதில் அடித்த டில்லி அணியில் நிசங்கா (41), ஸ்டப்ஸ் (60) மட்டும் சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் சீரான பங்களிப்பு அளிக்காததால் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சென்னை அணியின் பந்துவீச்சில் ஓவர்டன் 4 விக்கெட் மற்றும் கம்போஜ் 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியுடன் சேப்பாக்கத்தில் தொடர்ச்சியான 6 தோல்விகளுக்கு பின் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும், சென்னை அணிக்காக சஞ்சு சாம்சன் அடித்த இந்த சதம் அவரது முதல் சதமாகும். இதற்கு முன் அவர் ராஜஸ்தான் அணிக்காக 3 சதங்கள் அடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்