உடனடி செய்தி

சபரிமலை அபிஷேக நெய் விற்பனையில் ₹25 லட்சம் முறைகேடு: தேவஸ்வம் போர்டு தணிக்கையில் வெளிச்சம்

சபரிமலை அபிஷேக நெய் விற்பனையில் ₹25 லட்சம் முறைகேடு: தேவஸ்வம் போர்டு தணிக்கையில் வெளிச்சம்
திருவனந்தபுரம்: கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அபிஷேக நெய் விற்பனையில் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறை தெரிவித்துள்ளது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் அபிஷேக நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த விற்பனையில் கணக்கில் பல தவறுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறை இணைந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.16 லட்சம் முறைகேடு நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் மொத்தம் ரூ.25.52 லட்சம் வரை கணக்கில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக இரண்டு நெய் சேகரிப்பு மையங்களில் இந்த முறைகேடு நடந்ததாக அறிக்கை கூறுகிறது. மேலும், நெய் சேகரிப்பு, வடிகட்டுதல் மற்றும் பாக்கெட்டுகளில் நிரப்புதல் போன்ற செயல்முறைகளிலும் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. தயாரிக்கப்பட்ட நெய் பாக்கெட்டுகளின் அளவீடு மற்றும் எண்ணிக்கை தொடர்பான பதிவுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. சில பதிவுகள் பள்ளி நோட்டு புத்தகங்களில் எழுதப்பட்டிருந்ததுடன், அவற்றில் பல திருத்தங்களும் செய்யப்பட்டிருந்தன. ஒரு கிலோ பிளாஸ்டிக் பாக்கெட் ரோலில் இருந்து தயாரிக்கப்பட்ட பாக்கெட்டுகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகமாக மாறுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த சீசனுக்கு முன் நெய் விற்பனை முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என தணிக்கை துறை பரிந்துரைத்துள்ளது. விற்பனை கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்கள் நியமித்தல் மற்றும் காலாண்டு தணிக்கைகள் நடத்தவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை ஆய்வு செய்த கேரள உயர் நீதிமன்றம், விவகாரத்தில் மேலும் விரிவான விசாரணை நடத்தி முழு அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்வம் போர்டு தணிக்கை துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
19 மணி நேரங்கள் முன்பு
பள்ளிகளில் விபூதி, குங்குமம் அணிவதில் தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிகளில் விபூதி, குங்குமம் அணிவதில் தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
19 மணி நேரங்கள் முன்பு
பழனிசாமி தலைமையை சி.வி.சண்முகம் சாடல்: அதிமுக எதிர்காலம் குறித்து கடும் எச்சரிக்கை
பழனிசாமி தலைமையை சி.வி.சண்முகம் சாடல்: அதிமுக எதிர்காலம் குறித்து கடும் எச்சரிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
100 ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்எஸ்எஸ் குறித்து விழிப்புணர்வு தேவை: மோகன் பகவத்
100 ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்எஸ்எஸ் குறித்து விழிப்புணர்வு தேவை: மோகன் பகவத்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்