வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கை: தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி
நாடு முழுவதும் நம்பகமான மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வினாத்தாள் கசிவு கும்பல்களை எந்த சூழலிலும் தப்பிக்க விடமாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய பிரதமர் மோடி, தேர்வு முறையில் நம்பகத்தன்மையை வலுப்படுத்த பணிக்குழுக்கள் அமைத்தல், விரைவு நீதிமன்ற நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள் உருவாக்குதல் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், பொது தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள பொது தேர்வுகள் முறைகேடு தடுப்பு (திருத்த) மசோதா - 2026 பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வினாத்தாள் கசிவு போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய மத்திய அரசு தனது சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்