உடனடி செய்தி

கோவில் குளங்களில் நீர்தரத்தை பாதுகாக்க நடவடிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கோவில் குளங்களில் நீர்தரத்தை பாதுகாக்க நடவடிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள கோவில் குளங்களின் நீர்தரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அனைத்து கோவில் குளங்களையும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பராமரிக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் இறந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த பசுமை தீர்ப்பாயம், குளங்களை தொடர்ந்து சுத்தம் செய்தல், நீரின் தரத்தை அவ்வப்போது பரிசோதித்தல், பாசி மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், குளத்தின் படிகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றுவதை கட்டுப்படுத்துதல், பொதுமக்கள் வருகையை ஒழுங்குபடுத்துதல், மீன்கள் மீண்டும் உயிரிழப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மையை பராமரித்து, கழிவுகளை உடனுக்குடன் அகற்ற சென்னை மாநகராட்சிக்கும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. நீர்வாழ் சூழலமைப்பை பாதுகாக்க, வண்டல் மண் அகற்றுதல் மற்றும் நீர்மாசு தடுப்பு பணிகளை அனைத்து கோவில் குளங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்