காமன்வெல்த் 2026: ஈட்டி எறிதல் பைனலுக்கு நீரஜ் சோப்ரா; தமிழக வீரர்களும் அசத்தல்
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் எறிந்து பைனலுக்கு தகுதி பெற்றார். கடும் எதிர்க்காற்று மற்றும் குளிரான வானிலை காரணமாக எந்த வீரரும் நேரடி தகுதி இலக்கான 84 மீட்டரை எட்டவில்லை. இதனால் முன்னிலை பெற்ற 12 வீரர்கள் பைனலுக்கு முன்னேறினர்.
இந்திய வீரர்களான ரோகித் யாதவ் (78.37 மீ.) மற்றும் யாஷ்வீர் சிங் (78.36 மீ.) ஆகியோரும் பைனல் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இலங்கையின் ருமேஷ் தரங்கா 82.84 மீட்டர் எறிந்து தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தார்.
டிரிபிள் ஜம்ப் தகுதிச்சுற்றில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் (16.41 மீ.) மற்றும் செல்வ பிரபு (16.26 மீ.) சிறப்பாக செயல்பட்டு பைனலுக்குள் நுழைந்தனர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் தமிழரசன் மற்றும் யாஷஸ் பாலக் ஷா ஆகியோரும் பைனல் வாய்ப்பை உறுதி செய்தனர்.
பெண்கள் குண்டு எறிதலில் மன்பிரீத் கவுர் நான்காவது இடத்தையும், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பாருல் சவுத்ரி ஐந்தாவது இடத்தையும் பெற்றனர். நீச்சலில் ஆர்யன் நெஹ்ரா 1500 மீட்டர் பிரீஸ்டைலில் ஏழாவது இடமும், பெண்கள் +86 கிலோ பளுதூக்குதலில் மார்டினா தேவி ஐந்தாவது இடமும் பிடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்