செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் தண்டலம், மேவளூர்குப்பம், செட்டிப்பேடு, கீவளூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீர் கால்வாய்கள் வழியாக ஏரிக்குள் கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள சில தொழிற்சாலைகளின் கழிவுநீர் பல ஆண்டுகளாக ஏரியில் கலப்பதாக சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கோரி பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தற்போது, இந்த வழக்கில் சிப்காட் நிர்வாகத்தையும் தரப்பாக இணைத்துள்ள தீர்ப்பாயம், செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பது குறித்த விளக்கத்தை வரும் 29-ஆம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்