உடனடி செய்தி

சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – கொல்கத்தா மீண்டும் தோல்வி

சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – கொல்கத்தா மீண்டும் தோல்வி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 'டாஸ்' வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணிக்காக சஞ்சு சாம்சன் அதிரடி துவக்கம் அளித்து முதல் ஓவரிலேயே தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்தார். ருதுராஜ் விரைவில் அவுட்டானாலும், ஆயுஷ் மாத்ரே வேகமான 38 ரன்கள் எடுத்து ரன் வேகத்தை உயர்த்தினார். பின்னர் சாம்சன் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். மத்திய கட்டத்தில் பிரவிஸ் 41 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 192/5 ரன்கள் குவித்தது. பதிலுக்கு விளையாடிய கொல்கத்தா அணியில் ரகானே (28), ரகுவன்ஷி (27) தவிர மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. நூர் அகமது சிறப்பான பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். கடைசியில் பாவெல் (31), ராமன்தீப் (35) போராடினாலும், அணியை வெற்றிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 160/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணியின் தோல்வி தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
1 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்