உடனடி செய்தி

செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு: முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பு

செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு: முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பு
தமிழக மின்வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி அளவிலான முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது. 2021 முதல் 2023 வரை 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய டெண்டர் ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க்குகள் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சென்னை போலீசார் நடத்திய விசாரணையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய கணினி ஆப்பரேட்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும், ஹார்டு டிஸ்க்குகளும் தற்போது சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்த சில முக்கிய ஆவணங்களும் விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்