சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய விவகாரம்: தி.மு.க. வீடியோ சர்ச்சை
வேலூர்: தமிழகம் முழுவதும் வரவிருக்கும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வீடியோவில், “காட்பாடி என்றாலே துரைமுருகன் ஐயா தான்”, “வாக்களிப்பீர் உதயசூரியன்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரத்தில், இரண்டு சிறுவர்கள் கட்சிக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியபடி ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ரேவதியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏழு சிறுவர்கள் பதாகைகள் ஏந்திய சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தர்மேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பில் தென் மாநிலங்கள் இணைப்பு; 'ஆப்பரேஷன் துபான்' திட்டம் விரிவாக்கம்
7 மணி நேரங்கள் முன்பு
'போதையில்லா தமிழகம்' மாநாடு இன்று பொள்ளாச்சியில்; 'வீ த லீடர்ஸ்' சார்பில் அண்ணாமலை பங்கேற்பு
7 மணி நேரங்கள் முன்பு
பின்னணிப் பாடல் உலகின் ஜாம்பவான் எஸ். ஜானகி காலமானார்; இசை ரசிகர்கள் சோகத்தில்
7 மணி நேரங்கள் முன்பு
பதவி, 'சீட்' ஏமாற்றம்: காங்கிரஸிலிருந்து தவெக-வுக்கு நகரும் சிதம்பரம் ஆதரவாளர்கள்?
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்