உடனடி செய்தி

சிவகங்கை: எம்.பி. கார்த்தி அலுவலகத்தில் ரூ.13.40 லட்சம் பறிமுதல் – அதிகாரிகளிடமிருந்து பணம் பறித்து தப்பிய இருவர்

சிவகங்கை: எம்.பி. கார்த்தி அலுவலகத்தில் ரூ.13.40 லட்சம் பறிமுதல் – அதிகாரிகளிடமிருந்து பணம் பறித்து தப்பிய இருவர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. Karti Chidambaram அவர்களின் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13.40 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பணத்தை எண்ணிக் காட்டுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அதிகாரி ஒருவர் பணப்பையை எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென இருவர் அந்த பணத்தை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க அதிகாரிகள் முயன்றபோது, அங்கிருந்த சிலர் அதிகாரிகளின் காரின் சாவியையும் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து உதவி தேர்தல் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் மற்றும் ஏ.எஸ்.பி. ஆஷிஸ் புனியா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்