உடனடி செய்தி

பச்சிளம் குழந்தை ராஜஸ்தானுக்கு கடத்த இருந்த கிருத்துவ பாதிரியார்

பச்சிளம் குழந்தை ராஜஸ்தானுக்கு கடத்த இருந்த கிருத்துவ பாதிரியார்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சிளம் குழந்தை  ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் கிறிஸ்டி என்ற பெண், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை உடல்நலக்குறைவு காரணமாக அனுமதித்துள்ளார். குழந்தையின் தாய் என்று கூறியதால் கிறிஸ்டியின் வயதையும், உருவத்தையும் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் கிறிஸ்டியை பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ருக்குமணியாபுரத்தை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட 16 வயது சிறுமியுடைய குழந்தை என்றும், புளியங்குடியில் உள்ள சூர்யா என்ற தனியார் மருத்துவமனையில் பிறந்த அக்குழந்தை விலைக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த சூர்யா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் ஓட்டுநராக வேலை செய்யும் இம்மானுவேல் என்பவர் கிறிஸ்டியின் சகோதரியின் கணவர் ஆவர். அவர் மூலம் தான் குழந்தை விற்கப்பட்டுள்ளது.

குழந்தையை கிறிஸ்டியும், ராஜஸ்தானை சேர்ந்த அவரது கணவரான பாதிரியார் வல்ராமும் ராஜஸ்தானுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவர் வல்ராம், இம்மானுவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்