உடனடி செய்தி

மது போதையில் பணிக்கு வந்த இஸ்லாமிய மருத்துவர் பணியிடை நீக்கம்

மது போதையில் பணிக்கு வந்த இஸ்லாமிய மருத்துவர் பணியிடை நீக்கம்
திருவையாறு திருவையாறு அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த இஸ்லாமிய மருத்துவர் பணியிடை நிக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மெகபூப் பாஷா என்னும் இஸ்லாமிய மருத்துவர் பணி புரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு பணிக்கு அவர் மதுபோதையில் வந்துள்ளார். நடக்கக் கூட முடியாத நிலையில் ஓரு அறையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்துள்ளார். மருத்துவமனைகு அச்சமயத்தில் பல நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு வந்துள்ளனர். ஆனால் மருத்துவர் மெகபூப் பாஷா சிகிச்சை செய்ய வ்ரவில்லை. ஊழியர்கள் சென்ற போது அவர் அறைக்கதவை பூட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. பல முறை கதவைத் தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. அப்போது ஒரு சிலர் இதை புகைப்படம் எடுத்து முதன்மை மருத்துவருக்கு புகார் அனுப்பி உள்ளனர். அதை ஒட்டி நடந்த விசாரணையில் முதன்மை மருத்துவர் பரிந்துரையின் பேரில் மெகபூப் பாஷா பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் மேலும் தண்டனை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்லாமிய சட்டபடி மது குடிப்பது ஹராம் (தவறானது) என சொல்லி வரும் நிலையில் பொறுப்பான பணியில் உள்ள மருத்துவரான ஒரு இஸ்லாமியர் குடிபோதையில் பணிக்கு வந்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்