உடனடி செய்தி

“என் அரசியல் அனுபவம் உங்க வயசுக்கு சமம் கூட இல்லை” – உதயநிதிக்கு கடும் பதில் அளித்த பழனிசாமி

“என் அரசியல் அனுபவம் உங்க வயசுக்கு சமம் கூட இல்லை” – உதயநிதிக்கு கடும் பதில் அளித்த பழனிசாமி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார். “என்னை மோடியின் முரட்டு பக்தர் என கூறுகிறார் உதயநிதி. அதைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்,” என சாடிய அவர், “நான் 58 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என் அரசியல் அனுபவம் கூட உங்க வயசுக்கு சமம் கிடையாது. வரம்பு மீறி பேசினால் என் தொண்டர்களே பதிலடி கொடுப்பார்கள்” என்று ஆவேசமாக தெரிவித்தார். மேலும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி குறித்து பேசும்போது, “அவர் குடும்ப நலனுக்காகவும் பதவிக்காகவும் மட்டுமே டெல்லி சென்றார்” என்று குற்றம் சாட்டினார். அதேபோல், 2ஜி வழக்கில் கனிமொழிக்கு ஆதரவாக டெல்லி சென்றதாகவும் கூறினார். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்காக தமது ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்ததாகவும், சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதாகவும் பழனிசாமி குறிப்பிட்டார். காவிரி–குண்டாறு–வைகை இணைப்பு திட்டத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும், அந்த திட்டத்தை தற்போதைய அரசு முடக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “தி.மு.க. ஆட்சி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்,” என்றார். மேலும், வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்த அவர், “அப்பா–மகன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற அமைச்சர்களுக்கு முக்கியத்துவமே இல்லை” என குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் பல சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், இஸ்லாமிய மக்களுக்கான உதவிகள், நோன்பு கால அரிசி வழங்குதல், ஹஜ் மானியம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இறுதியாக, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது என்றும், திமுக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்