உடனடி செய்தி

சிவகங்கையில் நான் வெற்றி பெறுவது உறுதி - எச்.ராஜா ஜி நம்பிக்கை

சிவகங்கையில் நான் வெற்றி பெறுவது உறுதி - எச்.ராஜா ஜி நம்பிக்கை

சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி என்று எச். ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் எச். ராஜா களமிறங்கினார், காங்கிரஸ் தரப்பில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டார் . இதுபோக அ.ம.மு.க. வேட்பாளரும் களத்தில் இருந்தனர்.

https://twitter.com/HRajaBJP/status/1119075418965852161

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள மானாமதுரை தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 70 சதவீதம் வாக்குப்பதிவானது.

இந்நிலையில் சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதியென எச். ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும், கடுமையாகப் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், பாஜக தொண்டர்களுக்கும், தேசிய உணர்வாளர்களுக்கும், மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள். சிவகங்கையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கும் ,ஊழல் பணநாயகத்திற்குமான போட்டியில் வெற்றி உறுதி” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்