உடனடி செய்தி

கவர்னர் உரை இன்று: முழு உரை வாசிப்பாரா ரவி? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

கவர்னர் உரை இன்று: முழு உரை வாசிப்பாரா ரவி? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். இந்த உரையில் அரசின் கொள்கைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்கால அறிவிப்புகள் இடம்பெறும். தமிழக அரசு தயாரித்து அனுப்பும் உரையை கவர்னர் சட்டசபையில் வாசிப்பார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, கவர்னர் முழு உரையை வாசிப்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. கவர்னர் ரவிக்கு பாரம்பரிய மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கவர்னர் உரை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, இந்தாண்டு உரை முழுமையாக வாசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்பதிலும் அரசியல் வட்டாரங்களில் கவனம் திரும்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்