உடனடி செய்தி

2025 டிசம்பரில் ₹1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய அரசு அறிவிப்பு

2025 டிசம்பரில் ₹1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.74 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூலில் CGST ₹34,289 கோடி, SGST ₹41,368 கோடி மற்றும் IGST ₹98,394 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வசூலான ₹1.64 லட்சம் கோடியை ஒப்பிடுகையில் இது 6.1% அதிகமாகும்.

2025–26 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக ₹16.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.6% வளர்ச்சியாகும்.

2024–25 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹22.08 லட்சம் கோடியாக இருந்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கு பின், ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ₹1.82 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பதன் காரணமாக ஆண்டுதோறும் ஜிஎஸ்டி வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2020–21 நிதியாண்டில் ₹11.37 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், 2023–24 நிதியாண்டில் ₹20.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்