உடனடி செய்தி

இந்து தமிழர் கட்சியின் இந்து தமிழர் முன்னணி கொடி அறிமுக விழா

இந்து தமிழர் கட்சியின் இந்து தமிழர் முன்னணி கொடி அறிமுக விழா

இந்து தமிழர் கட்சி இந்து தமிழர் முன்னணி இதன் கொடி அறிமுக விழா பொள்ளாச்சியில்
21 7 2019 ஞாயிற்றுக்கிழமை காலை பொள்ளாச்சி செல்வி மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் பொள்ளாச்சி
ஆர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சி
T. மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

இந்து தமிழர் முன்னணி மகளிர் அணி கோவை மாவட்ட அமைப்பாளர் சகோதரி லதா செந்தில் அவர்கள் சுமதி அவர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்தார்கள்.

அங்கலக்குறிச்சி செந்தில் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் பழனி திரு மனோஜ் குமார், கடலூர் பரணிதரன், பட்டுக்கோட்டை சன் சிவா மற்றும் வழக்கறிஞர் செந்தில் காஞ்சி ராஜேஷ் பழனி மாரிமுத்து காளிமுத்து உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் முன்னிலையில் இந்து தமிழர் கட்சி-

இந்து தமிழர் முன்னணி கொடியை
நிறுவனர் திரு இராம இரவிக்குமார் அவர்கள் அறிமுகப்படுத்தி, இந்த அமைப்பு வேல் பக்தியின் மூலமாக,
முருக பக்தியின் மூலமாக ,
தமிழகத்தில் பக்தியின் மூலமாக இந்து சக்தியை வலுப்பெறச் செய்ய அனைவரும் பாடுபடுவோம்
என்று வேண்டுகோள் விடுத்தார்.
திரு ராம்குமார் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

விழா சிறப்புற நடைபெற பாடுபட்ட உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்