இல்லத்தரசிகளுக்கு ₹8,000 கூப்பன் – வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஸ்டாலின் வாக்குறுதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய அறிவிப்பாக, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு ₹8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த கூப்பனை பயன்படுத்தி, வாஷிங் மிஷின், டிவி, பிரிஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்களை வாங்கலாம். புதிய பொருட்கள் வாங்குவதோடு, பழைய பொருட்களை மாற்றிக்கொள்ளவும் இந்த கூப்பன் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை ₹1,000 இலிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டு, மேலும் 15 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவியாக 1,000 குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும் என்றும், உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
3 மணி நேரங்கள் முன்பு
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் அதிகரிக்கும் கவலை
3 மணி நேரங்கள் முன்பு
கவர்னரை சந்தித்த திமுக, அதிமுக: த.வெ.க. அரசு மீது குதிரைப் பேரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள்
3 மணி நேரங்கள் முன்பு
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்