உடனடி செய்தி

இந்திய தயாரிப்புகளுக்கான வரி 18% ஆக குறைப்பு – டிரம்ப்க்கு மோடி நன்றி

இந்திய தயாரிப்புகளுக்கான வரி 18% ஆக குறைப்பு – டிரம்ப்க்கு மோடி நன்றி

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடி இந்திய மக்களின் சார்பில் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து, இந்த வரி குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிபர் டிரம்புடன் நடந்த உரையாடல் மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்துள்ள மோடி, இந்த முடிவு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என கூறினார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் முக்கிய பொருளாதாரங்கள் இணைந்து செயல்படும்போது, மக்கள் நலனுக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார். டிரம்பின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும், இருநாட்டு உறவுகளை மேலும் உயர்த்த இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்