இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
இந்தியா–சீனா இடையிலான எல்லை பிரச்னைகள் மற்றும் இருதரப்பு உறவில் உள்ள பிற விவகாரங்களுக்கு, ராணுவ மற்றும் துாதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020ல் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா–சீனா உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
டில்லியில் நடைபெற்ற எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பின் கூட்டத்தில், எல்லை வரையறை, எல்லை நிர்வாகம் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழல் குறித்தும் இரு தரப்பும் ஆய்வு செய்தன. எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுவது, இந்தியா–சீனா இருதரப்பு உறவை முன்னேற்றுவதற்கு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தற்போதுள்ள துாதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தை அமைப்புகள் மூலம் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. குறிப்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளின் ராணுவ தளபதிகள் மட்டத்திலான சந்திப்புகளை தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
22 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
23 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்