உடனடி செய்தி

இந்தியாவின் 3வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ‘அரிதமன்’ கடற்படையில் இணைப்பு

இந்தியாவின் 3வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ‘அரிதமன்’ கடற்படையில் இணைப்பு
புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிதமன்’ கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 2016ஆம் ஆண்டு முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ‘அரிஹந்த்’ ரகசியமாக சேவையில் இணைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது கப்பல் ‘அரிஹத்’ 2024ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது ‘அரிதமன்’ கடற்படையில் இணைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், முந்தைய கப்பல்களை விட அதிக திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்த கப்பல், 3,500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது. இந்த கப்பல், பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கிய 83 மெகாவாட் அழுத்தப்பட்ட நீர் உலையின் மூலம் இயக்கப்படுகிறது. இதனால், நீண்ட நேரம் கடலுக்கடியில் செயல்பட முடியும். மேலும், இந்த கப்பலில் எட்டு செங்குத்து ஏவுகணை குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது, அரிஹந்த் கப்பலை விட இரு மடங்கு தாக்குதல் திறனை வழங்குகிறது. இதனுடன், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஐ.என்.எஸ். தாராகிரி’ என்ற அதிநவீன போர்க்கப்பலையும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல், எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்ளும் நவீன ஆயுதங்களையும் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
8 மணி நேரங்கள் முன்பு
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
8 மணி நேரங்கள் முன்பு
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
2 நாட்கள் முன்பு
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்