உடனடி செய்தி

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை உயர்த்திய உலக வங்கி: 6.60% ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்ப்பு

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை உயர்த்திய உலக வங்கி: 6.60% ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்ப்பு
புதுடில்லி: உலக வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 6.50 சதவீதமாக இருந்த இந்த கணிப்பு, தற்போது சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வலுவான உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி காரணமாக, கடந்த நிதியாண்டில் பொருளாதாரம் 7.60 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச சந்தை அதிர்வுகள், இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. மேலும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, மக்களின் செலவழிக்கும் திறன் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி குறைப்பின் தாக்கம் ஆரம்ப காலங்களில் நுகர்வோர் தேவையை ஊக்குவித்தாலும், அதன் நீண்டகால தாக்கம் சவாலாக இருக்கலாம். சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்கு அதிக மானியம் வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், அரசின் செலவீன திட்டங்களிலும் மாற்றம் ஏற்படலாம். இதற்கிடையில், சர்வதேச சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக முதலீட்டு வளர்ச்சியும் மந்தமாகும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு நிலை, கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் வலுவான நிதிநிலை போன்றவை, இந்த சவால்களை சமாளிக்க உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
9 மணி நேரங்கள் முன்பு
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
9 மணி நேரங்கள் முன்பு
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
2 நாட்கள் முன்பு
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்