650 மருத்துவ இடங்கள் பாதிப்பு: சுகாதார அமைச்சரிடம் முக்கிய கேள்வி எழுப்பிய அண்ணாமலை
தமிழகத்தில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர் நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில், மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் பாதிப்பு தொடர்பாக தாங்கள் முன்வைத்த தகவல்களையே தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த நிர்வாகக் குறைபாட்டிற்கு யார் பொறுப்பு, எந்த அதிகாரிகள் தங்களது கடமையை நிறைவேற்றத் தவறினர், இது அலட்சியமா அல்லது திட்டமிட்ட நிர்வாகப் பிழையா என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தால் மாநில ஒதுக்கீட்டில் சுமார் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர் உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வியை எதிர்பார்த்த ஏராளமான மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை அரசு அலட்சியமாகக் கருதக் கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
'துரோகிகளைப் பற்றி பேச வேண்டாம்; புதிய நிர்வாகிகளுடன் அதிமுக வலுப்படும்' - பழனிசாமி உறுதி
18 மணி நேரங்கள் முன்பு
வயநாடு நிலச்சரிவு: அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமித் ஷா உறுதி
1 நாட்கள் முன்பு
அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு; 5 நாட்களில் 1.13 லட்சம் தரிசனம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்