உடனடி செய்தி

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் ஜூலை 12-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேருக்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் அதன் மதிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படாதது பக்தர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேரின் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதுகுறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தங்கத்தின் மதிப்பீட்டு பணி நிறைவடையாததே காரணம் என அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர். பல மாதங்கள் கடந்தும் மதிப்பீட்டு பணி முழுமையடையாத நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தங்க தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், தங்கத்தின் மதிப்பீட்டு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் தேரோட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அதேபோல், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகந்நாதன், மேலிட அறிவுறுத்தலின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தங்கத்தின் இறுதி மதிப்பீடு குறித்து அறநிலையத்துறை ஆணையரின் முடிவே இறுதியானதாக இருக்கும் என்றும் கூறினார். இதற்கிடையில், தேரில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை, தூய்மை மற்றும் மதிப்பு போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாததால், வெளிப்படைத்தன்மை குறித்து சில தரப்பினரிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும், இதே கோவிலில் உத்சவர் சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் தொடர்பான முறைகேடு வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டிருந்ததால், தங்க தேரு தொடர்பான அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
11 மணி நேரங்கள் முன்பு
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
20 மணி நேரங்கள் முன்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
3 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்