உடனடி செய்தி

ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்: இந்தியாவில் LPG சிலிண்டர் விலை திடீர் உயர்வு

ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்: இந்தியாவில் LPG சிலிண்டர் விலை திடீர் உயர்வு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழ்நிலை உலகளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கமாக இந்தியா முழுவதும் LPG சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ.60 உயர்ந்துள்ளது. அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.115 உயர்வு கண்டுள்ளது.

இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விலையின்படி சென்னையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ.928.50 க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.2043.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் சூழ்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
20 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
20 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்