உடனடி செய்தி

இரு இந்தியர்களுக்கு ஹண்டா வைரஸ் அபாயம் – சொகுசு கப்பலில் பரபரப்பு

இரு இந்தியர்களுக்கு ஹண்டா வைரஸ் அபாயம் – சொகுசு கப்பலில் பரபரப்பு
லண்டன்: நெதர்லாந்தைச் சேர்ந்த ‘ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்’ நிறுவனத்தின் ‘எம்.வி. ஹோண்டியஸ்’ என்ற சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் இருந்து பயணம் தொடங்கியது. இது ஸ்பெயினின் கேனரி தீவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கப்பல் குழுவில் பணிபுரியும் இரு இந்தியர்களுக்கு தொற்று அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கப்பலில் இருந்த 40 பயணிகள் தெற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாவது: ஹண்டா வைரஸ் எலிகளின் சிறுநீர், எச்சங்கள் அல்லது உமிழ்நீரில் இருந்து காற்றில் பரவும் துகள்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதர்களிடையே பரவும் சம்பவங்கள் மிக அரிது. இது ஒரு கவலைக்குரிய சம்பவமாக இருந்தாலும், உலகளாவிய பொது சுகாதார அபாயம் தற்போது குறைவாகவே உள்ளது என WHO தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது: இந்த தொற்று தனிநபர் மட்டுமே சார்ந்ததாக இருப்பதால், இந்தியாவில் பரவும் அபாயம் தற்போது இல்லை.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்