உடனடி செய்தி

இடைத்தேர்தல் சீட் வேண்டுமா? வாரிய பதவி வேண்டுமா? குழப்பத்தில் 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

இடைத்தேர்தல் சீட் வேண்டுமா? வாரிய பதவி வேண்டுமா? குழப்பத்தில் 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அடுத்தகட்ட அரசியல் வாய்ப்புகள் குறித்து குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்துறை ஜெயகுமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் சத்யபாமா ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த நிலையில், அவர்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படுமா அல்லது வாரிய தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தகவலின்படி, தேர்தலில் செலவழித்த தொகையை வழங்க த.வெ.க. மேலிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இடைத்தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் ‘சீட்’ வேண்டுமா அல்லது வாரிய தலைவர் பதவி வேண்டுமா என மூவரிடமும் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, மூவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என்றும், வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கோரிக்கையை த.வெ.க. மேலிடம் உடனடியாக ஏற்காமல், ‘சர்வே’ அடிப்படையில் இடைத்தேர்தல் சீட் வழங்குவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், சீட் உறுதியாக கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில், இப்போதே வாரிய தலைவர் பதவி பெறுவது குறித்து மூவரும் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அ.தி.மு.க.வில் உள்ள மேலும் சில எம்.எல்.ஏ.க்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பதவி, 'சீட்' ஏமாற்றம்: காங்கிரஸிலிருந்து தவெக-வுக்கு நகரும் சிதம்பரம் ஆதரவாளர்கள்?
பதவி, 'சீட்' ஏமாற்றம்: காங்கிரஸிலிருந்து தவெக-வுக்கு நகரும் சிதம்பரம் ஆதரவாளர்கள்?
33 நிமிடங்கள் முன்பு
'உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை' - அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆதங்கம்
'உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை' - அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆதங்கம்
36 நிமிடங்கள் முன்பு
5 காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
5 காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
38 நிமிடங்கள் முன்பு
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்