உடனடி செய்தி

இடப்பாடி தேர்தல் 2026: பழனிசாமி vs செல்வகணபதி

இடப்பாடி தேர்தல் 2026: பழனிசாமி vs செல்வகணபதி
சேலம் மாவட்டத்தின் முக்கியமான சட்டசபை தொகுதிகளில் ஒன்றாக இடப்பாடி திகழ்கிறது. இந்த தேர்தலில் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் என்.டி.ஏ. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி மீண்டும் களமிறங்குகிறார். இத்தொகுதியில் பழனிசாமி ஏற்கனவே ஐந்து முறை வெற்றி பெற்று, இரு முறை தோல்வி கண்டுள்ளார். மேலும், லோக்சபா தேர்தலிலும் ஒரு முறை வெற்றி, இரு முறை தோல்வி என அரசியல் அனுபவம் கொண்டவர். மொத்தம் 2.74 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில், வன்னியர் சமூகமே 48% ஆக அதிகமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கொங்கு வேளாளர் கவுண்டர், ஆதிதிராவிடர், நாடார் உள்ளிட்ட சமூகங்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். 1967 மற்றும் 1971 தேர்தல்களில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க. வேட்பாளர் காவேரி வென்றார். இதைத் தவிர, மற்ற அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த பழனிசாமிக்கு, அந்த சமூகத்தின் வாக்குகள் உறுதியாக கிடைக்கும் நிலையில், மற்ற சமூகங்களிலிருந்தும் அதிக ஆதரவு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால், அவர் முதல்வராக இருந்த காலத்தில் தன் சமூகத்தவருக்கு அதிக வாய்ப்பளித்ததாக வன்னியர் சமூகத்தில் அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக 2019 லோக்சபா தேர்தலில் தி.மு.க. முன்னிலை பெற்றது. பின்னர் வன்னியர் சமூகத்தினருக்கு பதவிகள் வழங்கி அதிருப்தியை குறைத்த பழனிசாமி, 2024 லோக்சபா தேர்தலில் 46,320 வாக்குகள் முன்னிலை பெற்றார். இந்நிலையில், பழனிசாமிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. சேலம் மேற்கு மாவட்ட செயலரும், தற்போதைய எம்.பி.யுமான செல்வகணபதி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. மேலும், தி.மு.க.வில் சுப்பிரமணியம், சம்பத்குமார் உள்ளிட்டோரும் சீட் கேட்டு வருகின்றனர். இருப்பினும் கூட்டணி கட்சிகள் இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
14 மணி நேரங்கள் முன்பு
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
14 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
ஹார்முஸ் ஜலசந்தி சீரடைந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு; 4 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
14 மணி நேரங்கள் முன்பு
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்