உடனடி செய்தி

ஜம்மு காஷ்மீரில் ஆறு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்

ஜம்மு காஷ்மீரில் ஆறு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினரால் ஆறு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாராமுல்லாவின் க்ரீரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்கள் இருவரும் லஷ்கர்-இ -தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் அனந்த்நாக் மாவட்டத்தின் அர்வானி பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தாக்குதல் நடந்த இரண்டு இடங்களிலும் அதிகமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை குல்கம் பகுதியில் நடந்த இதே போன்ற தாக்குதலை அடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்ததை அடுத்து பொதுமக்கள் ஏழு பேர் பலியாயினர். தற்போதும் இது போன்ற அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க தாக்குதல் நடந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
13 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்