உடனடி செய்தி

காலை 9 மணி நிலவரம்: கேரளம், புதுச்சேரி, அசாமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காலை 9 மணி நிலவரம்: கேரளம், புதுச்சேரி, அசாமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 09) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, கேரளாவில் 16.23% புதுச்சேரியில் 17.41% அசாமில் 17% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்று மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர். புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகளில் பல்வேறு கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கேரளாவில் 140 தொகுதிகளில் 2.7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு பகுதிகளில் கூடுதல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அசாமில் 126 தொகுதிகளில் 2.5 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்துகின்றனர். இந்நிலையில், நரேந்திர மோடி வாக்காளர்கள் அதிகளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
1 நாட்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்