உடனடி செய்தி

காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் காஜா கனிக்கு அரசியல் தொடர்பு சர்ச்சை – நிர்வாகம் நோட்டீஸ்

காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் காஜா கனிக்கு அரசியல் தொடர்பு சர்ச்சை – நிர்வாகம் நோட்டீஸ்

சென்னையில் இயங்கும் காயிதே மில்லத் கல்லூரியில் தமிழ்துறை தலைவராக பணியாற்றும் பேராசிரியர் காஜா கனி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் அரசு ஊதியம் பெறும் பேராசிரியர் ஒருவர் அரசியல் கட்சி தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சட்டப்படி ஏற்றதா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேவேளை, தன்னிடம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காஜா கனி, தாம் அரசியல் நோக்கில் அல்லாமல் சமூக கோரிக்கைகளை முன்வைக்க மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பு குறித்து குரல் எழுப்பியதற்காகவே தம்மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் கல்வித்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்