உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் இது 4வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 ஆகவும், டீசல் விலை ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15ம் தேதி முதல் இதுவரை பெட்ரோல் விலை ரூ.4.78 மற்றும் டீசல் விலை ரூ.4.84 வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏற்படும் இந்த விலை உயர்வு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வர்த்தக துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய நகரங்களின் பெட்ரோல் விலை டில்லி – ரூ.102.12 கொல்கட்டா – ரூ.113.51 மும்பை – ரூ.111.21 சென்னை – ரூ.107.77 முக்கிய நகரங்களின் டீசல் விலை டில்லி – ரூ.95.20 கொல்கட்டா – ரூ.99.82 மும்பை – ரூ.97.83 சென்னை – ரூ.99.55 மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் இந்த நிலை நீடித்தால், வருங்காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரக்கூடும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்
கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்
23 மணி நேரங்கள் முன்பு
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை; விதிமீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை; விதிமீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
23 மணி நேரங்கள் முன்பு
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்