உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு

கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டசபை, வரும் நவம்பர் 8ம் தேதியை தீபாவளி நாளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் மாநில மக்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்களால் முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. நன்மை தீமையை வெல்வதையும், ஒளி இருளை அகற்றுவதையும் குறிக்கும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. கலிபோர்னியாவில் தீபாவளிக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக ஏற்கனவே சட்டம் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அதற்கு நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய வம்சாவளியினரின் கலாசாரத்தை அங்கீகரிக்கும் வகையில், மாநில சட்டசபை தற்போது தீபாவளி தொடர்பான தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. சட்டசபை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் முன்மொழிந்த இந்த தீர்மானம், கலிபோர்னியாவிலும் உலகம் முழுவதும் வாழும் இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. தீர்மானத்தில், தீபாவளி 'ஒளித் திருவிழா' என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வீடுகளை எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் அகல் விளக்குகளால் அலங்கரித்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் பண்டிகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞானம், கருணை, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
17 மணி நேரங்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
17 மணி நேரங்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
1 நாட்கள் முன்பு
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய ராணுவம் ஒத்திகை
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய ராணுவம் ஒத்திகை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்