உடனடி செய்தி

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துவ போதகர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் கூடுகை நிகழ்ச்சியில் சபாநாயகர் பிரபாகர் மற்றும் அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் பிரபாகர், சிறுபான்மை மக்களுக்கான வாய்ப்புகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார். அமைச்சர் வன்னி அரசு தனது உரையில் குடியுரிமை திருத்தச் சட்டம், சிறுபான்மை உரிமைகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறித்து பேசினார். இந்த பேச்சுகள் குறித்து சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதச்சார்பற்ற அரசியலை முன்னிறுத்தும் தவெக கட்சிக்குள்ளும் அதிருப்தி எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்கட்டளைப்படி நிர்வாகிகள் மத மற்றும் ஜாதி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சபாநாயகர் பிரபாகர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கட்சி தலைமையிடம் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளக்கத்தில், அமைச்சர் வன்னி அரசு பேசும்போது தான் நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், அவரது உரை குறித்து முன்கூட்டியே தெரியாது என்றும், எதிர்காலத்தில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம், அரசியல் மற்றும் மத நிகழ்வுகளில் பொதுப் பதவியில் உள்ளோர் பங்கேற்பது குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்