உடனடி செய்தி

கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு

கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
கோவை: புதிய அரசியல் இயக்கமான “இது நம்ம இயக்கம்” தொடங்கிய பிறகு முதல் முறையாக கோவைக்கு வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவில் இருந்து விலகிய பின்னர் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, சமூக வலைதளங்கள் வாயிலாக புதிய இயக்கத்தை அறிவித்திருந்தார். அவரது கூற்றுப்படி, இயக்கத்தில் ஏற்கனவே 17.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலையை தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக வரவேற்றனர். சால்வை அணிவித்து, கோஷங்கள் எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். புதிய அரசியல் இயக்கத்தின் அடுத்தகட்ட பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் குறித்து அண்ணாமலை விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்