உடனடி செய்தி

கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு: எஸ்.பி. செந்தில்குமார் கைது

கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு: எஸ்.பி. செந்தில்குமார் கைது
கோவை: கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவில் கமாண்டன்ட் ஆக பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் மீது பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் குடும்பத்துடன் அங்கு தங்கி பணிபுரிந்த அவர், பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியதாகவும், தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த மாதம் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அரசின் அனுமதி இல்லாமல் தலைமையிடம் கடந்து செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் போலீஸ் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
1 நாட்கள் முன்பு
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
1 நாட்கள் முன்பு
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
1 நாட்கள் முன்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்