உடனடி செய்தி

மேற்கு வங்க தேர்தல் 2026: எஸ்.ஐ.ஆர் திருத்தம் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – அரசியல் அதிர்ச்சி

மேற்கு வங்க தேர்தல் 2026: எஸ்.ஐ.ஆர் திருத்தம் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – அரசியல் அதிர்ச்சி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைப்பெற்ற எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையால், சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் அரசியல் தரப்புகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி செய்து வரும் திரிணமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த திருத்தத்திற்கு முன்பு, மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.66 கோடியாக இருந்தது. தற்போது அது 6.77 கோடியாக குறைந்துள்ளது. வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த மாற்றம் வெற்றி-தோல்வி கணக்கீடுகளை முற்றிலும் மாற்றக்கூடும். நீக்கப்பட்ட வாக்காளர்களில் சுமார் 66.6 லட்சம் பேர் திரிணமுல் காங்கிரசின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த கட்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாஜகவின் முக்கிய ஆதரவாளர்களாக உள்ள மதுவா சமூகத்தினர் வசிக்கும் 55 தொகுதிகளிலும் வாக்காளர் நீக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக நாடியா மாவட்டத்தில் மட்டும் 78% பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் வாக்காளர்களின் விகிதமும் குறைந்துள்ளது. முன்பு 1,000 ஆண்களுக்கு 959 பெண்கள் இருந்த நிலையில், தற்போது அது 950 ஆக குறைந்துள்ளது. இது மம்தா பானர்ஜியின் முக்கிய வாக்கு வங்கியான பெண்களின் செல்வாக்கை குறைக்கக்கூடும். மேலும், 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த தேர்தலில் இருந்த வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், 45 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும், 20 தொகுதிகளில் பாஜகவுமே 10,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களை விட, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களே முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. வென்றாலும் பா.ஜ. ஆட்சி – ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
அ.தி.மு.க. வென்றாலும் பா.ஜ. ஆட்சி – ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
20 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலை குற்றச்சாட்டு: தேர்தலுக்கு பின் தி.மு.க.வில் பிளவு ஏற்படும்?
அண்ணாமலை குற்றச்சாட்டு: தேர்தலுக்கு பின் தி.மு.க.வில் பிளவு ஏற்படும்?
20 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க.க்கு எதிராக வேலூரில் உள்குத்து குற்றச்சாட்டு
அ.தி.மு.க.க்கு எதிராக வேலூரில் உள்குத்து குற்றச்சாட்டு
20 மணி நேரங்கள் முன்பு
சஞ்சு சாம்சன் சதம் அதிரடி: சென்னை அணி முதல் வெற்றி
சஞ்சு சாம்சன் சதம் அதிரடி: சென்னை அணி முதல் வெற்றி
20 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்