மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் நிர்வாக நிபந்தனைகளுடன் அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் செப்டம்பர் 6 முதல் தொடங்குகின்றன. செப்டம்பர் 16 அதிகாலை பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரை முக்கிய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்கான அனுமதியை கோவில் நிர்வாகம் அறநிலையத்துறையிடம் கோரியிருந்தது. அதனை பரிசீலித்த அறநிலையத்துறை கமிஷனர் வினய், 12 முக்கிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக தனியாக நன்கொடை வசூலிக்கக் கூடாது என்றும், கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. உபயதாரர்கள் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றாலும், அதனை காரணமாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகசாலை மற்றும் பந்தல் அமைப்புகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும். மின் வசதிகள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய சான்றிதழ்களை பெற வேண்டும். மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேவையானால் பக்தர்களுக்கு காப்பீட்டு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சாரங்கள் மற்றும் கோவில் விமானத்தின் மீது பக்தர்கள் ஏற அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட 12 நிபந்தனைகளை பின்பற்றி கும்பாபிஷேகத்தை நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
5 மணி நேரங்கள் முன்பு
நேபாள சுரங்கத்தில் 9 நாட்கள் போராட்டம்: உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்
5 மணி நேரங்கள் முன்பு
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
1 நாட்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்