உடனடி செய்தி

துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய பிரதமர் மோடி

துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்தார்.

திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புனிதநீராடி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுவதற்காக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கினார்.

யாரும் எதிர்பாராத விதமாக, விருதுபெற்ற 5 துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, பூஜை செய்தார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய மோடி, கும்பமேளாவிற்காக 20,000 க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இவற்றை துப்புரவு பணியாளர்கள் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். எனது சகோதர, சகோதரிகளான இவர்கள் தினமும் அதிகாலையிலேயே எழுகிறார்கள். இரவில் தாமதமாகவே தூங்கச் செல்கிறார்கள். நாள் முழுவதும் இப்பகுதியை தூய்மை வைத்துக் கொள்வதிலேயே கழிக்கிறார்கள். அவர்கள் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொய்வும் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் என் நினைவில் இருப்பார்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
3 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
3 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்