பதவியேற்பு விதிமீறல்: 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை ரத்து செய்த கேரள ஐகோர்ட்
கேரளாவில் பதவியேற்பு நடைமுறைகளை மீறியதாகக் கூறி, 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவியேற்பை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதவியேற்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு, திருவனந்தபுரம் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் ‘பாரத மாதா’ உள்ளிட்ட பெயர்களை குறிப்பிட்டு உறுதிமொழி எடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல், வடக்கஞ்சேரி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரால் பதவியேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு முரணானவை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பதவியேற்பு நடைமுறை சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வடிவிலேயே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், மக்கள் பிரதிநிதிகள் ‘கடவுள் மீது ஆணையிட்டு’ அல்லது ‘உளமார உறுதி ஏற்கிறேன்’ என்ற வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதவியேற்க வேண்டும் என்றும், வேறு சொற்கள் அல்லது பெயர்களை சேர்க்க சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட 20 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பஞ்சாயத்து உறுப்பினரின் பதவியேற்பு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர்களின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் என்றும், நான்கு வாரங்களுக்குள் சட்டப்படி மீண்டும் பதவியேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்