உடனடி செய்தி

பிரசார செலவுகள் அதிகரிப்பு: திருப்பூரில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

பிரசார செலவுகள் அதிகரிப்பு: திருப்பூரில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவினங்களுக்கான விலை நிர்ணயம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை தாங்கினார். கூட்டத்தில், தேர்தல் பிரசார வாகனங்கள் மற்றும் ஒலி உபகரணங்களுக்கான விலைப்பட்டியல் பவர்பாயிண்ட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விலைப்பட்டியலை பார்த்த அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், நடைமுறையில் ஒரு பிரசார வாகனத்துடன் மைக், ஸ்பீக்கர், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சேர்த்து ஒருநாள் ரூ.1,500க்கு வாடகைக்கு கிடைக்கிறது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் வாகனத்துக்கு மட்டும் ரூ.2,000 நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், மைக், ஸ்பீக்கர் போன்றவை தனித்தனியாக அதிக விலைக்கு குறிப்பிடப்பட்டுள்ளதும் எதிர்ப்பை கிளப்பியது. உதாரணமாக, ஸ்பீக்கருக்கு பொதுவாக ரூ.150க்கு குறைவாகவே வாடகை வசூலிக்கப்படும் நிலையில், விலைப்பட்டியலில் ரூ.600 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, நடைமுறை விலைகளை கருத்தில் கொண்டு விலைப்பட்டியலை திருத்த வேண்டும் என வலியுறுத்தினர். முதல் ஸ்லைடிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், மற்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்படாமல் கூட்டம் திடீரென முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்